பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் கைது

கும்பகோணம் அருகே பிளஸ்-2 மாணவியை கர்ப்பிணியாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் காலனி தெருவை சேர்ந்தவர் பிரியா (வயது16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

பந்தநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமார் மகன் கமலேஷ் (23)

இந்த நிலையில் கடந்த ஆண்டு மாணவி பிரியாவை வாலிபர் குமார் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவி கர்ப்பம் அடைந்தார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கடந்த ஒரு வருடமாக கமலேசை போலீசார் தேடிவந்த நிலையில் பந்த நல்லூர் இன்ஸ்பெக்டர் சுகுணா, குமாரை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com