

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 25-ம் தேதி தொடங்கியது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டியில் இந்தியாவின் எச்.எஸ். பிரனோய், டென்மார்க்கின் கொரியாவின் ஜியோன் ஹேயோக்-ஜின்னை எதிர்த்து விளையாடினார். இப்போட்டியில் 21-16, 21-16 என்ற நேர் செட்களில் எச்.எஸ். பிரனோய் வெற்றி பெற்றார்.
இதேபிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் - சீனா வீரர் யூகி ஷீ ஆகியோர் பலப்பரீட்சை செய்தனர். இப்போட்டியின் முதல் செட்டை 21-8 என யூகி ஷீ கைப்பற்றினார். அதன்பின்னர் சுதாரித்துக் கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் அடுத்த இரண்டு செட்களையும் 21-19, 21-9 என கைப்பற்றினார். இதன்மூலம் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். ஸ்ரீகாந்த் அரையிறுதி போட்டியில் சக நாட்டு வீரரான பிரனோயுடன் மோத உள்ளார்.