

அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இடைக்கால தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரமிளா ஜெயபால் பொறுப்பு ஏற்றார்.
ஜனநாயக கட்சி எம்.பி. ஆன பிரமிளா ஜெயபால் தான் பாராளுமன்ற கீழவை தலைவர் இருக்கையில் அமர்ந்த முதல் தெற்கு ஆசிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் சென்னையில் பிறந்தவர். சிங்கப்பூரிலும், இந்தோனேசியாவிலும் வளர்ந்தார். 1982-ல் அமெரிக்காவுக்கு குடியேறினார். அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் அமெரிக்க கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய பெண் ஆவார்.