யானைகளை கொல்வது இந்திய கலாசாரம் அல்ல: பிரகாஷ் ஜவடேகர் கண்டனம்

நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
பிரகாஷ் ஜவடேகர்
பிரகாஷ் ஜவடேகர்
Published on

புதுடெல்லி :

கேரளாவில், அன்னாசி பழத்துக்குள் நாட்டு வெடிகுண்டை வைத்து ஊட்டியதால், ஒரு கர்ப்பிணி யானை, வாய் வெடித்து உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தனது ‘டுவிட்டர்’ பதிவில் கூறியிருப்பதாவது:-

யானை கொல்லப்பட்ட சம்பவத்தை மத்திய அரசு தீவிர கவனத்தில் கொண்டுள்ளது. இதை முறையாக விசாரித்து, குற்றவாளிகளை பிடிப்பதில் எந்த வாய்ப்பையும் தவறவிட மாட்டோம். நாட்டு வெடிகுண்டை ஊட்டி கொலை செய்வது இந்திய கலாசாரம் அல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com