95 சதவீத பகுதிகளில் மின்வெட்டால் இருளில் மூழ்கிய சென்னை: பொதுமக்கள் அவதி

மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதால் சென்னையின் 95 சதவீத பகுதிகளில் இரவில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
95 சதவீத பகுதிகளில் மின்வெட்டால் இருளில் மூழ்கிய சென்னை: பொதுமக்கள் அவதி
Published on

சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகளில் இன்று நள்ளிரவில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. மின்நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதாக மின்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டை அடுத்து, சென்னையின் முக்கிய பகுதிகளான நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், ராயப்பேட்டை, வியாசர்பாடி, கொளத்தூர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர் என சென்னை மாநகரின் 95 சதவீத பகுதிகள் இருளில் மூழ்கியது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சென்னை வாசிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com