

புதுடெல்லி:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் 900 குழுமங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ.7900 கோடி பிடிபட்டதாக மத்திய நிதி மந்திரி தெரிவித்துள்ளார்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர் 900 குழுமங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணமாக ரூ.7900 கோடி பிடிபட்டதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து மார்ச் 2017 வரை 8,200 நிறுவனங்களின் வரவு-செலவுகளை ஆய்வு செய்த வகையில் கணக்கில் வராத 6700 கோடி ரூபாய் கண்டு பிடிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 275 குழுமங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 7800 கோடி ரூபாய் சிக்கியது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை பெருகி உள்ளது. கடந்த நிதி ஆண்டில் 3.25 பேர் ஆன்லைன் முறையின் மூலம் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 3.89 ஆக அதிகரித்துள்ளது. இது 19.5 சதவீதம் அதிகமாகும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.