திடீர் பிரேக் போட்டதால் புல்லட்டில் இருந்து விழுந்த தொழிலாளி பலி

போரூர் அருகே கார் மீது மோதாமல் இருக்க திடீரேன பிரேக் போட்டதால் புல்லட்டில் இருந்து நிலை தடுமாறி விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பலியானார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

போரூர்:

ஆதம்பாக்கம் நீலம்மங்கள் நகர் விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது63). வீட்டு உபயோக பொருட்கள் சர்வீஸ் சென்டர் நடத்தி வந்தார்.

இவர் நேற்று இரவு தனது நண்பர் மகன் கார்த்திகேயனுடன் “புல்லட்” வண்டியில் பின்னால் அமர்ந்து கொண்டு மவுண்ட்- பூந்தமல்லி நெடுஞ்சாலை ஸ்ரீராம் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே கார் ஒன்று வேகமாக வந்தது. கார் மீது மோதாமல் இருக்க கார்த்திகேயன் திடீரென பிரேக் போட்டார் இதில் நிலை தடுமாறிய கார்த்திகேயன் புல்லட்டோடு சாலையில் விழுந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த குமரவேல் புல்லட் வண்டியின் அடியில் சிக்கிக் கொண்டார் தலை மற்றும் வயிற்றில் படுகாயமடைந்த குமரவேலை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தியாகராயநகர் போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com