போரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபர் கைது

போரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூரில் போதை மாத்திரையுடன் நைஜீரியா வாலிபர் கைது
Published on

போரூர்:

போரூர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை செய்து வந்த மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து ஏராளமான போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் குமரேசன் அளித்த தகவலின்படி, போரூர் பைபாஸ் சாலை அருகே நேற்று இரவு நைஜீரியாவைச் சேர்ந்த சிகு சைமன் ஒபானா (30) என்பவரை போரூர் இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

அவனிடமிருந்து 450 போதை மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவன் நெதர்லாந்து நாட்டில் இருந்து போதை மாத்திரைகளை வரவழைத்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி அதை சென்னை, கோவா, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டாளிகள் மூலம் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது.

சென்னையில் கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை சப்ளை செய்யப்பட்டு இருக்கிறது. கைதான சிகு சைமனுக்கு சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com