போப் ஆண்டவருக்கு புத்தகம் பரிசளித்த மத்திய மந்திரி

கேரள கன்னியாஸ்திரியின் புனிதர் பட்ட விழாவில் போப் ஆண்டவருக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் புத்தகத்தை பரிசளித்தார்.
கன்னியாஸ்திரி மரியம் திரேசியா
கன்னியாஸ்திரி மரியம் திரேசியா
Published on

வாடிகன் சிட்டி:

கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி மரியம் திரேசியாவுக்கு வாடிகன் நகரில் நேற்று முன்தினம் நடந்த வண்ணமிகு விழாவில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. அவருடன் மேலும் 4 பேருக்கும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

இந்த விழாவில் இந்தியாவின் சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் தலைமையிலான உயர்மட்டக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின் போப் ஆண்டவரை முரளீதரன் சந்தித்தார்.

அப்போது அவருக்கு, ‘மகாத்மா காந்தியின் பார்வையில் பகவத் கீதை’ என்ற புத்தகத்தை பரிசாக வழங்கினார். மேலும் இந்தியாவின் பாரம்பரியம் மிக்க கேரள கோவில் திருவிழாக்களை பிரதிபலிக்கும் வகையில், அலங்கரிக்கப்பட்ட யானை சிலை ஒன்றையும் போப் ஆண்டவரிடம் முரளீதரன் வழங்கினார்.

இவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட போப் பிரான்சிஸ், அதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com