இஸ்ரோ தலைவர் சிவனுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

இஸ்ரோ தலைவர் சிவனை நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இஸ்ரோ தலைவர் சிவனுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

இஸ்ரோ தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நாகர்கோவில் சரக்கல் விளையை சேர்ந்த விஞ்ஞானி சிவனை நேற்று டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது ஏற்படும் காலநிலைகளை விண்வெளி ஆராய்ச்சி மூலம் அறிந்து, அதை தெரியப்படுத்தவும் மற்றும் வறட்சி காலத்தில் விவசாயத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த அறிவிப்புகளை தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க விஞ்ஞானி சிவனிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com