பொன்னேரி அருகே ரூ.3 லட்சத்துடன் தலைமறைவான பெண் ஊழியர் கைது

பொன்னேரி அருகே பைனான்ஸ் நிறுவனத்தில் வசூலான ரூ.3 லட்சத்துடன் தலைமறைவான பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி அருகே ரூ.3 லட்சத்துடன் தலைமறைவான பெண் ஊழியர் கைது
Published on

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த சின்ன கவனம் பகுதியை சேர்ந்தவர் வினோதினி (28).

இவர் பொன்னேரியில் உளள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில், பெண்களுக்கு கடன் வழங்கும் பிரிவில் ஊழியராக வேலை பார்த்தார். மாதம் ஒருமுறை கிராமப் பகுதிகளுக்கு சென்று வாடிக்கையாளர்களிடம் கடன் வசூல் செய்வார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் வாடிக்கையாளர்களிடம் ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 386 ரூபாய் கடனை வசூல் செய்தார். ஆனால் அந்த பணத்தை பைனான்ஸ் நிறுவனத்திடம் செலுத்தாமல் தலைமறைவானார்.

இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வினோதினியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

தீவர விசாரணைக்கு பிறகு வினோதினி பொன்னேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் நீதிபதிஉத்தரவுப்படி புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com