பொன்னேரியில் காரில் வந்து கொள்ளை அடித்த 4 பேர் கும்பல்- ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்

பொன்னேரியில் காரில் வந்து கொள்ளை அடித்த 4 பேர் கொண்ட கும்பலில் ஒருவனை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கைதான பூபாலன்.
கைதான பூபாலன்.
Published on

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள தடப்பெரும்பாக்கம் காலனியில் வசித்து வருபவர் ஆனந்தன். வீட்டு முன்பு மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டுவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் 4 பேர் கும்பல் காரில் வந்தனர். திடீரென அவர்கள் ஆனந்தனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.

சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் விசாரித்த போது 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களின் ஒருவனை மட்டும் பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மற்ற 3 பேரும் தப்பி ஓடி விட்டனர்.

பிடிப்பட்ட வாலிபர் சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவை சேர்ந்த பூபாலன் என்பது தெரிந்தது. அவனை பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர்.

கொள்ளையர்கள் வந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் கத்தி, கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன.

தப்பியோடிய கூட்டாளிகள் குறித்து பிடிபட்ட பூபாலனிடம் விசாரணை நடந்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com