அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பொன்னேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் திடீர் வேலை நிறுத்தம்

ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக பொன்னேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அரசு ஊழியர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பொன்னேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
Published on

பொன்னேரி:

7-வது ஊதிய குழுவன் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பொன்னேரி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேராசிரியர்கள் யாரும் கல்லூரிக்கு வரவில்லை.

இதையடுத்து கல்லூரிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. பேராசிரியர்களின் போராட்டத்தால் இன்று நடைபெற இருந்த எம்.பில் வேதியியல் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com