பொன்னம்மாப்பேட்டையில் சிலிண்டர் திருடிய வாலிபர் கைது

பொன்னம்மாப்பேட்டையில் சிலிண்டர் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னம்மாப்பேட்டையில் சிலிண்டர் திருடிய வாலிபர் கைது
Published on

கொண்டலாம்பட்டி:

சேலம் பொன்னம்மாப்பேட்டை புதுமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (26). இவர் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றபோது வீட்டின் உள்ளே இருந்த சிலிண்டரை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து கிருஷ்ணன் அம்மாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் (33) என்பவர் சிலிண்டரை திருடியது தெயரிவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com