ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Published on

பொன்னமராவதி:

மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடக்கோரி பொன்னமராவதி உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. திருமயம் கோட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் ராஜேந்திரன், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் கோட்ட தலைவர் அடைக்கலராஜ், செயலாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com