மனைவியை உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற கூலித்தொழிலாளி கைது

பொன்மலைப்பட்டி அருகே மனைவியை உயிரோடு எரித்துக்கொல்ல முயன்ற கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பொன்மலைப்பட்டி:

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 58). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பாத்திமா பேகம் (50). நேற்று முன்தினம் இரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜாமுகமது, வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து பாத்திமா பேகம் மீது ஊற்றி தீ வைத்தார். 

பாத்திமா பேகத்தின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள், உடல் கருகிய நிலையில் இருந்த பாத்திமா பேகத்தை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாமுகமதுவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com