

நாகர்கோவில்:
குமரி மாவட்டம் திக்கனங்கோட்டில் இன்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரதிராஜா மிக சிறந்த மனிதர். தவறான புரிதல் காரணமாக ரஜினியை கர்நாடக காவி தூதுவர் என்கிறார். திரையுலகை சேர்ந்தவர்கள் கன்னட நடிகர்கள் தமிழிலும், தமிழ் நடிகர்கள் கன்னடத்திலும் நடிக்கக்கூடாது என கூறுவார்களா?
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நான் கருத்து கூறியதற்கு அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்துள்ளார். அவருக்கு பொறுமை தேவை.
அருப்புக்கோட்டை பேராசிரியை தொடர்பான பிரச்சினைகள் இனியும் நடக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவருக்கும் உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் இப்பயிற்சியை கொடுக்க வேண்டும்.
காவிரி பிரச்சினைக்காக தி.மு.க. மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.