தேவரின் கனவை மோடி நிறைவேற்றுகிறார்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்

தேவர் கண்ட கனவு மோடி அரசால் நிறைவேறுகிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தேவரின் கனவை மோடி நிறைவேற்றுகிறார்: மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா சார்பில் இந்த விழாவில் பங்கேற்பது பெருமை அளிக்கிறது. சமத்துவத்தோடு வாழ்ந்தவர் முத்துராமலிங்கத் தேவர். ஊழலற்ற, சுதந்திரமான ஆட்சியைதான் அவர் எதிர்பார்த்தார்.


அவருடைய கனவு மத்தியில் ஆளும் மோடி அரசால் நிறைவேறுகிறது. இதனை விண்ணுலகத்தில் இருந்து தேவர் பார்த்து வருகிறார். அவர் எதை மையமாக வைத்து வாழ்ந்தாரோ அதை பின்பற்றுவதுதான் நமது கடமை. அவருக்கு சிலை வைப்பதோ, படம் வைப்பதோ பெரிதல்ல. அவரது லட்சியத்தை நிறைவேற்றுவதுதான் நமது கடமை.

X

Maalai Malar
www.maalaimalar.com