லாஸ்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

லாஸ்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாஸ்பேட்டையில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

லாஸ்பேட்டை குறிஞ்சிநகரை சேர்ந்தவர் ஆதிமூலம். இவர் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மலர்விழி. இவர்களது மூத்த மகன் அரவிந்த் (வயது22). இவர் லாஸ்பேட்டை மோதிலால்நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு மனஅழுத்தம் நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக இவர் பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் அரவிந்த் தங்கி இருந்த அறை கதவு வெகுநேரமாக திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த மலர்விழி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது அரவிந்த் மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அரவிந்தை தூக்கில் இருந்து மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அரவிந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை புறக்காவல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com