

மீஞ்சூர்:
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வு 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. பின்னர் இதன் தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்த பட்டியல் மீது சந்தேகம் அடைந்த மற்ற தேர்வாளர்கள் மேல்முறையீடு செய்தனர்.
அப்போது தான் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டெல்லியில் பணியாற்றிவரும் கம்ப்யூட்டர் என்ஜினீயரான ஷேக்தாவூத் நாசர் (வயது 37) என்பவர் இந்த வழக்கு தொடர்பாக பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரண் அடைந்தார். நீதிபதி உத்தரவின்பேரில் பொன்னேரி போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.