துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உதவியாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

சென்னையில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உதவியாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உதவியாளர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
Published on

சென்னை:

ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசித்து வருபவர் பக்தவச்சலம். இவர் சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் உதவியாளர் ஆவார்.

இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். திரும்பி வந்தபோது ஜன்னல் உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் கொள்ளை போயிருந்தது.

இதுகுறித்து ராயப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com