பொள்ளாச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பொள்ளாச்சி:

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நகர தலைவர் அருள், வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் வக்கீல் ரவி, நிர்வாகிகள் பகவதி, அன்வர், ஸ்ரீதர், பஞ்சலிங்கம், மாசிலாமணி, ஹக்கீம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com