110-வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் அரசிய்ல கட்சியினர் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
110-வது பிறந்த நாள்: அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
Published on

தஞ்சாவூர்:

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழா தஞ்சையில் இன்று நடந்தது. இதில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.வினர் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிக்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, முன்னாள் தொகுதி செயலாளர் துரை.திருஞானம், ஒன்றிய செயலாளர் துரை.வீரணன், முன்னாள் நகர செயலாளர் பண்டரிநாதன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் அமுதா ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் அறிவுடை நம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றிய செயலாளர் தனபால் மற்றும் தம்பிதுரை, கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில பொருளாளர் ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் ராஜேஸ்வரன், பகுதி செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் விருதாசலம், வட்ட செயலாளர் வேலாயுதம், வக்கீல் ஏ.ஜி.தங்கப்பன், துரை, நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் கீழவாசலில் இருந்து ஊர்வலமாக சென்று அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, முன்னாள் நகர் மன்ற தலைவர் இறைவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாநகர செயலாளர் நீலமேகம், மாவட்ட பொருளாளர் எல்.ஜி.அண்ணா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன், பொதுக்குழு உறுப்பினர் முரசொலி உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதைபோல் திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் வக்கீல் அமர்சிங் தலைமையில் தி.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர தலைவர் நரேந்திரன், நகர செயலாளர் முருகேசன், நகர துணைத் தலைவர் டேவிட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகளை சேர்ந்தவர்கள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com