இந்தியாவில் நம்பர்-ஒன் இடம்: மாலை மலருக்கு தலைவர்கள் வாழ்த்து

தமிழில் வெளியாகும் மாலை இதழ்களில் முதலிடத்தை பிடித்துள்ள மாலை மலருக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #Maalaimalar
இந்தியாவில் நம்பர்-ஒன் இடம்: மாலை மலருக்கு தலைவர்கள் வாழ்த்து
Published on

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்தியாவில் மாநிலம் தோறும் வெளிவரும் பல்வேறு மாலை பத்திரிகைகளில் தமிழ்நாட்டை சேர்ந்த மாலைமலர் பத்திரிகை முதன்மையாக திகழ்வது பெருமைக்குரியது. மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தில் மாலையில் வெளிவரும் மாலைமலர் பத்திரிகைக்கு 30 லட்சத்து 74 ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள் என ஐ.ஆர்.எஸ். 2017-ம் ஆண்டிற்கான ஆய்வு முடிவு வெளிவந்திருக்கிறது. இதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாலைமலர் பத்திரிகைக்கு தனிச்சிறப்பு கிடைத்திருக்கிறது. இது மாலை நாளிதழ் சரித்திரத்தில் ஒரு சாதனை என்று சொல்லலாம்.

ஜி.கே.வாசன்

மாலைமலர் பத்திரிக்கை தொடர்ந்து மக்கள் எண்ணங்களை நடுநிலையோடு பிரதிபலித்து மென்மேலும் வளர்ந்து, உயர்ந்து, சிறந்து விளங்க வேண்டும் என த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன்.

வி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் கூறி இருப்பதாவது:-

மாலைமலர் நாளிதழ் மக்கள் மனதில் நிரந்தர இடம் பெற்றுள்ள மாலைநாளிதழ் இந்தியாவின் நம்பர் 1 நாளிதழ் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

டாக்டர் வி.ஜி. சந்தோசம்

குறிப்பாக மாலைமலரில் இடம் பெறும் பற்பல தலைவர்களின் பிறந்தநாள், விழாக்கால செய்திகள், பண்டிகை கால செய்திகள் இவற்றை தொகுத்து வழங்குவதில் தன்னிகரற்ற இடத்தை வகிக்கின்றது என்பதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு டாக்டர் வி.ஜி. சந்தோசம் கூறியுள்ளார்.

சமத்துவ மக்கள் கழக நிறுவனர் தலைவர் நாராயணன்:-

இந்தியாவில் அதிக வாசகர்களைக் கொண்ட மாலை தினசரியாக சாதனை படைத்துள்ளது ‘‘மாலை மலர்’’ மாலை நாளிதழ். ஐ.ஆர்.எஸ். ஆய்வின்படி 30 லட்சத்து 74 ஆயிரம் வாசகர்கள் என்பது சாதாரண சாதனையல்ல. இது ஒரு சில காலை தினசரிகளை விட அதிகம் என்பதும் சாதனைதான்.

‘‘மாலைமலர்’’ மாலை நாளிதழை தொடங்கிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார், அவரைத் தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்ட சி.பாலசுப்ரமணியன் ஆதித்தன், அவர்களைத் தொடர்ந்து இளைய தலைமுறையினரின் நம்பிக்கை நட்சத்திரம் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோரின் கடின உழைப்பின் பயனாக வந்ததே இந்த சாதனை.

அனைவருக்கும் சமத்துவ மக்கள் கழகம் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com