சிவகாசி அருகே போலீஸ் ஏட்டு தற்கொலை

சிவகாசி அருகே போலீஸ் ஏட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை
தற்கொலை
Published on

சிவகாசி:

சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார் புரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 49). இவர் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

அலெக்சாண்டரின் மனைவி பாண்டீஸ்வரி. இவர்களுக்கு தாரணி, ரோஷிணி என்ற 2 மகள்கள் உள்ளனர். தாரணி பிளஸ்-2 படித்து வருகிறார். ரோஷிணி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மகள்களை பள்ளியில் விடுவதற்காக பாண்டீஸ்வரி இன்று காலை பள்ளிக்கு சென்றிருந்தார். அந்த சமயத்தில் அலெக்சாண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அலெக்சாண்டர் திடீரென்று இந்த பரிதாப முடிவை தேடிக்கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அலெக்சாண்டர் தற்கொலை குறித்து திருத்தங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அலெக்சாண்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com