ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் - காவல்துறை அதிகாரி ஒருவர் பலி

ஜம்மு காஷ்மீரில் காவல்நிலையத்தின் மீது எதிர்பாராவிதமாக பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி கொல்லப்பட்டார். #JammuKashmir #MillitantAttack
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் -  காவல்துறை அதிகாரி ஒருவர் பலி
Published on

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்து வருகிறது. பாதுகாப்பு படையினரும் உரிய பதிலடி கொடுத்துவரும் நிலையில், தொடர்ந்து அத்துமீறல்களையும், தாக்குதல்களையும் பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர்.

இன்று அதிகாலை ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவாட்டத்தில் உள்ள காவல்நிலையத்தை திடீரென சுற்றி வளைத்த பயங்கரவாதிகள் சரமாரியாக சுட்டனர். அப்போது அவர்களை எதிர்த்து போராடிய சகிப் மிர் என்ற காவல்துறை அதிகாரி பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து, பாதுகாப்பு படைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். படுகாயமடைந்த காவலர் சகிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது, அந்த பகுதியில் பயங்கரவாதிகளை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். #JammuKashmir #MillitantAttack

X

Maalai Malar
www.maalaimalar.com