விருதுநகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய போலீஸ்காரர் கைது

பணியில் சேர்ப்பது தொடர்பான பிரச்சினையில் சப்இன்ஸ்பெக்டரை மிரட்டியதாக போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது
கைது
Published on

விருதுநகர்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் மாயக்கண்ணன் (வயது 30). இவர் விருதுநகர் ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக மாயக்கண்ணன் பணிக்கு வராமல் நீண்ட விடுப்பு எடுத்து சென்று விட்டார் இதற்கான முறையான காரணத்தையும் அவர் அதிகாரிகளிடம் தெரி விக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாயக்கண்ணன் விருதுநகர் ஆயுதப்படை பிரிவுக்கு சென்று தன்னை மீண்டும் அணியில் சேர்த்துக் கொள்ளுமாறு ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமாரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மேல் அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் மாயக்கண்ணன் தன்னை உடனே பணியில் சேர்க்குமாறு வலியுறுத்தினார். இதனால் சப்- இன்ஸ் பெக்டர் ஜெயகுமாருக்கும், மாயக்கண்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தன்னை மிரட்டியதாக ஜெயக்குமார், மாயக்கண்ணன் மீது சூலக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுதப்படை போலீஸ்காரர் மாயக்கண்ணனை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com