போலீஸ் உடையில் டிக் டாக் வீடியோ - துணை நடிகைக்கு போலீஸ் எச்சரிக்கை

லைக்கிற்கு ஆசைப்பட்டு போலீஸ் உடையில் டிக்டாக் வீடியோ பதிவிட்ட துணை நடிகை ஸ்ரீனிகாவுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
துணை நடிகை ஸ்ரீனிகா
துணை நடிகை ஸ்ரீனிகா
Published on

சென்னை:

டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள்.

ராதிகா என்ற ஐடியில் இருந்து தினமும் போலீஸ் உடையில் பெண் ஒருவர் டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். சில வீடியோக்களில் அவருடன் இருந்தவர்களும் போலீஸ் உடையில் இருந்தனர். இதனால் பெண் போலீசார் டிக் டாக்கில் கூத்தடிக்கிறார்கள் என்று விமர்சித்து வந்தனர்.

இந்த வீடியோக்கள் போலீசாரின் கவனத்திற்குச் செல்ல, டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட ஐடியில் உள்ள வீடியோக்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் நர்சாக இருந்து துணை நடிகையான ஸ்ரீனிகா என்பதை போலீசார் கண்டு பிடித்தனர். லைக்கிற்கு ஆசைப்பட்டு அந்த பெண் இவ்வாறு செய்து வந்துள்ளார். அவரை கண்டுபிடித்து காவல் துறையை இழிவுபடுத்தும் வகையில் இனி வீடியோ வெளியிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

உண்மையான காவலர்கள் என நினைத்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வீடியோக்கள் பெண் காவலர்களுக்கு அவப்பெயரை வாங்கித்தருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com