போலந்து நாட்டில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை வீச்சு

போலந்து நாட்டில் பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்கள்  மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசிய காட்சி
போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசிய காட்சி
Published on

வார்சா:

போலந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 18 ஆயிரத்து 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

கொரோனாவால் தொழில் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அறிவிக்கக்கோரி, தொழில்முனைவோர் உள்பட ஏராளமானோர் நேற்று தலைநகர் வார்சாவில் போராட்டம் நடத்தினர்.

அதிக அளவில் கூடுவது சட்டவிரோதம் என்று கூறி, கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். அதை மீறி, போலீசார் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசினர். தடியடியும் நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com