மாஞ்சா நூல் விற்றால் கடும் நடவடிக்கை- போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாஞ்சா நூல் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாஞ்சா நூல்
மாஞ்சா நூல்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மாஞ்சா நூலில் தயார் செய்யப்பட்ட காற்றாடிகள் பறக்க விடப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதுபோன்ற செயல்களினால் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் கழுத்தில் கண்ணாடி துகள்களால் தயார் செய்யப்பட்ட மாஞ்சா நூல் சிக்கி படுகாயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

மீறி யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீதும், 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்றால் சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர். மேலும் கடைகளில் யாரேனும் மாஞ்சா நூல் மற்றும் மாஞ்சா நூல் தயார் செய்ய பயன்படும் பொருட்களை விற்பனை செய்தால், அவர்களின் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com