சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாற்றம்

சாராய வியாபாரி பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உமராபாத் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மிட்டாளம் பகுதியை சேர்ந்தவர் அஜித், சாராய வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜித் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் உராபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். அப்போது, இருவரும் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ந்துள்ளனர். மேலும் சாராய வியாபாரி சப்-இன்ஸ்பெக்டருக்கு சால்வை அணிவித்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொ. விஜயகுமார், சாராய வியாபாரியின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com