

போரூர்:
விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சந்திரசேகர் (வயது 55). இவரது சொந்த ஊர் பட்டுக்கோட்டை ஆகும்.
காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கடந்த 3 நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார்.