குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் பார்த்த கவுசல்யா.
சங்கர் கொலை வழக்கு தீர்ப்பை வீட்டில் இருந்தபடி டி.வி.யில் பார்த்த கவுசல்யா.
Published on

திருப்பூர்:

உடுமலை சங்கர் மனைவி கவுசல்யா நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலைபார்த்து வருகிறார். சங்கர் கொலை வழக்கில் தீர்ப்பு அறிவிப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பே அவர் குமரலிங்கத்தில் உள்ள சங்கர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

நேற்று தீர்ப்பு அறிவித்ததையொட்டி சங்கர் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரலிங்கத்திற்கு வரும் வெளியூர்காரர்கள் தீவிர விசாரணைக்கு பின் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com