பிரிட்டனில் நுழைந்த கண்டெய்னரில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் வியட்நாமியர்கள்

லண்டனில் நுழைந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியில் கண்டெடுக்கப்பட்ட 39 பிணங்களும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி
பிணங்கள் கண்டெடுக்கப்பட்ட லாரி
Published on

லண்டன்:

லண்டன் நகரின் கிழக்குப் பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.

கண்டெய்னரின் உள்ளே கிடந்த 39 பிணங்களை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சுமார் 25 வயது மதிக்கத்தக்க லாரி டிரைவரை கைது செய்து விசாரித்தனர். கைதான டிரைவர் வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கண்டெய்னரில் கிடந்த 39 பிணங்களும் வியட்நாம் நாட்டை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 31 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் அடங்குவர். அவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com