புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் 4 சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்

புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் 4 சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்திய தகவலறிந்த போலீசார் அந்த சிறுமிகளை மீட்டனர்.
புதுவையில் ஆட்டோ டிரைவர்கள் 4 சிறுமிகளை வீட்டில் அடைத்து வைத்து விபசாரம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கும்பல் சிறுமிகள் சிலரை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும், அவர்களை முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களுக்கு விருந்தாக்கியதும் தெரிய வந்தது.

இதையடுத்து 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 8 பேர் போலீஸ் அதிகாரிகள். இந்த சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புதுவை வம்பா கீரப்பாளையத்தில் 4 சிறுமிகளை ஆட்டோ டிரைவர்கள் சிலர் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 பேரையும் போலீசார் மீட்டுள்ளனர்.

வம்பா கீரப்பாளையத்தில் ஒரு வீட்டில் சிறுமிகள் சிலர் தங்க வைக்கப்பட்டுள்ளதையும், அங்கு ஆண்கள் அடிக்கடி வந்து செல்வதையும் பார்த்த அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் பேரில் ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அங்கு சென்று விசாரித்த போது, 4 சிறுமிகளையும் ஒரு கும்பல் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்தது.

இவர்கள் 4 பேரில் 3 பேர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து தப்பி வந்தவர்கள். வீட்டை விட்டு வெளியேறியும், ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து வெளியேறி வரும் சிறுமிகளை சிலர் ஏமாற்றி அழைத்து வந்து இதுபோன்ற விபசார கும்பலிடம் ஒப்படைப்பது வழக்கமாக உள்ளது.

அது போல்தான் இவர் கள் 4 பேரையும் விபசார கும்பலிடம் அழைத்து வந்துள்ளனர். இந்த சிறுமிகளை புதுவையில் உள்ள விடுதிகள் மற்றும் கடலூர் பகுதிக்கும் ஆண்களுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒரு சிறுமிக்கு குழந்தை உள்ளது. அவர் சிறுமியாக இருந்த நிலையிலேயே தனது காதலனை திருமணம் செய்துள்ளார். அதன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் அவரை கணவர் பிரிந்து விட்டார்.

அந்த சிறுமி மேலும் ஒருவரை திருமணம் செய்தார். அதில் கர்ப்பமுற்ற போது, அவரது மாமியார் கருத்தடை மாத்திரைகளை உணவில் கலந்து கொடுத்து குழந்தையை அழிக்க செய்தார்.

பின்னர் அங்கிருந்து அந்த சிறுமி வெளியேறி ஆண் நண்பர்களுடன் சுற்றினார். ஆனால், அவர் விபசார கும்பலை சேர்ந்தவர். இந்த சிறுமியை விபசார கும்பலிடம் விற்று விட்டார்.

மீட்கப்பட்ட 4 பேரில் 3 பேர் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில், ஒரு சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்த வழக்கு சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் தொடர்புடைய ஆட்டோ டிரைவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை தேடி வருகின்றனர்.

இது தொடர்பாக சிறுமிகளிடம் பாலியல் பலாத்காரம், சிறுமிகளை கடத்துதல், சிறுமிகள் பாலியல் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com