புளியந்தோப்பில் அதிரடி வேட்டை: பட்டாக்கத்திகளுடன் 5 ரவுடிகள் கைது

புளியந்தோப்பில் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பட்டாக்கத்திகளுடன் 5 ரவுடிகளை கைது செய்தனர்.
கைது
கைது
Published on

சென்னை:

சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த வகையில் புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ரவுடிகள் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். புளியந்தோப்பில் இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்ற பின்னர், அந்த பகுதியில் உள்ள தலைமறைவு ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பட்டாக்கத்திகளுடன் 5 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளியந்தோப்பு கே.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த சக்திவேல், சுரேஷ், கன்னிகா புரத்தை சேர்ந்த மாரி, வியாசர்பாடி சஞ்சய்நகரை சேர்ந்த ரபீக், புளியந்தோப்பு வ.உ.சி. நகர் ரகு ஆகிய 5 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் குற்ற பதிவேட்டி லும் இவர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் புளியந்தோப்பில் ரவுடிகள் வேட்டை தொடரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com