சண்முகாபுரத்தில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

சண்முகாபுரத்தில் நோய் கொடுமையால் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சண்முகாபுரத்தில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் சீனுவாசன் (வயது53). இவர் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு புற்றுநோய் இருந்ததால் திருமணம் செய்து கொள்ளாமல் தனது அண்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை சீனிவாசனுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சீனுவாசன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டு மாடிக்கு சென்று அங்குள்ள கொக்கியில் வயரால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சீனிவாசனின் அண்ணன் மகன் விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com