மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை மாநிலத்திற்குட்பட்ட மாகி பிராந்தியத்தில் பள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜிஸ் (வயது39). இவர் அங்குள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இதற்கிடையே ரெஜிஸ்க்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதற்காக அவர் பலரிடம் பணம் கடன்வாங்கி மதுகுடித்து வந்தார். மேலும் இவருக்கும் , அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று ரெஜிஸ் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து பள்ளுர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com