காசியின் வலையில் சிக்கிய தாய், மகள்- பரபரப்பு தகவல்

பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த காசியின் வலையில் தாய்-மகள் சிக்கிய பரபரப்பு தகவல் தற்போது வெளியாகி உள்ளன.
காசி
காசி
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் பல பெண்களுடன் பழகி ஆபாச படம் எடுத்து, அவற்றை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டார். இவரால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் காசியால் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

இதற்கிடையே காசி மீது நாகர்கோவில் நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு பெண் புகார் அளித்தார். அதோடு மேலும் சிறுமி உள்பட 3 பெண்கள் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார்களின் அடிப்படையில் காசி மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். மேலும் காசி மீது வடசேரி போலீஸ் நிலையத்தில் கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட காசியை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து காசி பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த நாகர்கோவிலை சேர்ந்த டேசன் ஜினோ (19) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், காசியின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நண்பர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது. அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் காசி பற்றி மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது படித்த மற்றும் பணக்கார பெண்களை மட்டுமே காசி ஏமாற்றியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது பெண்களுடன் பழகி அவர்களின் தாயாரையும் சீரழித்தது தெரிய வந்துள்ளது.

அதாவது மகள்களுடன் நெருங்கிப் பழகும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் காசி எடுத்து வைத்துக் கொள்வார். பின்னர் அந்த ஆபாச படங்களை அவர்களின் தாயாரிடம் காட்டி மிரட்டுவது, பணம் பறிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி, நாகர்கோவிலை சேர்ந்த தாய்-மகள் காசியின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் காசி மீது புகார் அளிக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com