நபிகள் நாயகத்தை ரஜினியுடன் ஒப்பிடுவதா?- சீமான் மீது கமி‌ஷனர் ஆபீசில் புகார்

நபிகள் நாயகத்தை ரஜினியுடன் ஒப்பிட்டு பேசியதற்காக சீமான் மீது தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் அமைப்பு சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. #Seeman
நபிகள் நாயகத்தை ரஜினியுடன் ஒப்பிடுவதா?- சீமான் மீது கமி‌ஷனர் ஆபீசில் புகார்
Published on

சென்னை:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி ஒன்றில், மோசஸ், நபிகள் நாயகம் போன்று ரஜினி, அவ்வப்போது 10 கட்டளைகளை வெளியிட்டு வருகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் முகமது புரோஸ்கான், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்களின் உயிரினும் மேலான முகமது நபியை நடிகர் ரஜினிக்கு ஈடாக பேசி எங்களின் மனதை புண்படுத்தி பேசி விமர்சித்த சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Seeman

X

Maalai Malar
www.maalaimalar.com