நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் - கைது

நெல்லை மாவட்டத்தில் போராட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் நூற்றுக்கு மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் தாக்குதல் - கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ வளாகத்தில் பயங்கர சப்தத்துடன் புகை வந்தது தொடர்பாக செய்தி வெளியிட்ட மூன்று செய்தியாளர்கள் மீது பணகுடி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள சுமார் 150

பத்திரிக்கையாளர்கள் பாளையங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, சட்டைகளை கிழித்தனர். செல்போன்களை பறித்து கீழே போட்டு உடைத்தனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பத்திரிக்கையாளர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com