சோளிங்கரில் ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி

மாற்றுத்துணி கூட இல்லாமல் சிரமப்பட்டு வந்த ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு போலீசார் நேரில் சென்று உதவி செய்தனர்.
ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி செய்த காட்சி.
ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு போலீசார் உதவி செய்த காட்சி.
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் வகையிலும் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தலைமையில் ‘நாங்கள் உங்களுக்காக’ என்ற புதிய செயல்முறை தொடங்கப்பட்டது. இதில் மாவட்டம் முழுவதும் 265 மூத்த குடிமக்கள் ஆதரவின்றி வாழ்ந்து வருவதை கண்டறிந்து அவர்களின் வீடுகளில் ரோந்து புத்தகம் வைக்கப்பட்டு தினசரி 3 வேளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோளிங்கர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாண்டியநல்லூர் கிராமத்தை சேர்ந்த மூத்த குடிமக்களான சின்னகுழந்தை மற்றும் நாகம்மா ஆகியோர் மாற்றுத் துணி கூட இல்லாமல் மிகவும் வறுமையில் உள்ளதை போலீசார் கண்டறிந்தனர். 

இதனையடுத்து கண்டறிந்து அவர்களுக்கு சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர், மகாராஜன் நேரில் சென்று மாற்று உடை மற்றும் காலணிகளை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட சின்ன குழந்தை, நாகம்மா இருவரும் காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com