வி‌ஷவாயு தாக்கி 2 பேர் பலி: காண்டிராக்டர்-சூப்பர்வைசர் கைது

அம்பத்தூர் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து காண்டிராக்டர் மற்றும் சூப்பர்வைசரை போலீசார் கைது செய்தனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

அம்பத்தூர்:

அம்பத்தூர்மண்டலம் ஜஸ்வந்த் நகர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள பணிமனை 91 கழிவுநீர் அகற்றும் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் கழிவு நீர் தொட்டிக்கு இரும்பிலான ஆன மூடி தயாரிக்கும் பணி நடந்தது.

அப்போது பாடி என்.எஸ்.கே. நகரை சேர்ந்த கண்ணன், கொளத்தூர் ரெட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் ஆகிய இருவரும் காலை முதல் வெல்டிங் வேலை செய்து வந்தனர்.

6 அடி ஆழமுள்ள அந்த கழிவு நீர் தொட்டியில் கண்ணன் விழுந்தார் அவரை காப்பாற்றும் முயற்சியில் பிரகாஷ் இறங்கினார். இருவரும் வி‌ஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர்.

பின்னர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவர் உடலையும் மீட்டனர். ஆனால் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்குப் பதிவு செய்து காண்ட்ராக்டர் சுரேஷ், சூப்பர்வைசர் கார்த்திக் ஆகியோரை கைது செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com