கிருமாம்பாக்கம் அருகே மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை

கிருமாம்பாக்கம் அருகே மகள் கணவருடன் குடும்பம் நடத்தாததால் வேதனை அடைந்த மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் அருகே மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே சார்காசிமேடு கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு. இவரது மனைவி கனகவல்லி (வயது60). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்ட நிலையில் கனகவள்ளி தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் கனகவள்ளியின் மகள் கணவருடன் குடும்பம் நடத்த பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இதுகனகவள்ளிக்கு மனவேதனையை ஏற்படுத்தியது. இதுபற்றி அக்கம் பக்கத்தினரிடம் கனகவள்ளி கூறி வருத்தப்பட்டு வந்தார். ஊராரும் இதுபற்றி கேலியாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கனகவள்ளி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளிவிதையை (வி‌ஷம்) அரைத்து குடித்து விட்டார். இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் கனகவள்ளி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com