பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி வி‌ஷம் குடித்து பலி

பல்லடத்தில் மனைவி குடிக்க பணம் தராததால் விசைத்தறி தொழிலாளி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடத்தில் விசைத்தறி தொழிலாளி வி‌ஷம் குடித்து பலி
Published on

பல்லடம்:

பல்லடம் செம்மிபாளையத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 49). விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கணவரை விட்டு பிரிந்து பாப்பாள் குழந்தைகளுடன் சூலூரில் உள்ள ராசிபாளையத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரன் அதே பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். சந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. குடிக்க பணம் கேட்டு ஜோதிமணியை அடிக்கடி தொந்தரவு செய்தார். நேற்றும் காலை குடித்து விட்டு வந்த சந்திரன் ஜோதிமணியிடம் மீண்டும் குடிக்க பணம் கேட்டார். பணம் ஏதுவும் இல்லை என்று கூறிய ஜோதிமணி கடைக்கு சென்று விட்டார். கடைக்கு சென்று சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது சந்திரன் சாணிப்பவுடர் குடித்து வாயில் மஞ்சள் நிற நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். 

அதிர்ச்சியடைந்த ஜோதிமணி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com