ரெட்டியார்பாளையத்தில் முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

ரெட்டியார்பாளையத்தில் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையத்தில் முதியவர் வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

புதுச்சேரி:

ரெட்டியார்பாளையம் அருகே முத்துபிள்ளை பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது87). இவர் கடந்த சில நாட்களாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வந்தார். வயது முதிர்ச்சியினால் ஆஸ்பத்திரியில் காண்பித்தும் மூட்டுவலி குணமாகவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று ராமச்சந்திரனுக்கு நோயின் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலிமருந்தை (வி‌ஷம்) தின்று விட்டார். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை அவரது மகன் திருஞானம் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று ராமச்சந்திரன் பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com