கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் பலி

கிருஷ்ணகிரி அருகே கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த கள்ளக்காதலனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
மரணம்
மரணம்
Published on

கிருஷ்ணகிரி:

கர்நாடகா மாநிலம் மைசூர் அடுத்த கோப்புலு கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. இவரது மனைவி பிந்து (20). இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் பிந்துவிற்கும், அதே பகுதியை சேர்ந்த மல்லிகார்ஜுனன்(28) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த பிந்துவின் வீட்டார், அவரை கண்டித்துள்ளனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி, வீட்டைவிட்டு வெளியேறியது. 

திருவண்ணாமலை செல்வதற்காக பஸ்சில்வந்த இவர்கள் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசியநெடுஞ்சாலையில் சிக்காரிமேடு என்ற இடத்தில் பஸ்நின்ற போது, பஸ்சில் இருந்து இறங்கி தாங்கள் வாங்கி வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்துள்ளனர். 

இதைபார்த்த மற்ற பயணிகள் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிரசிகிச்சை அளித்தும் பலனின்றி பிந்து பரிதாபமாக இறந்தார். மல்லிகார்ஜுனனை தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, அவரும் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விவசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com