போத்தனூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

போத்தனூர் அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

போத்தனூர்:

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த இரு தினங்களுக்கு முன் தங்களது 17 வயது மகள் மாயமானதாக போத்தனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை தேடி வந்தனர். இதற்கிடையே பழனி போலீசில் கோவையைச் சேர்ந்த இளம்ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து போத்தனூர் போலீசார் நடத்திய விசாரணையில், கோவை சேர்ந்த சிறுமியை, பழனி காந்திபுரத்தை சேர்ந்த தன்னாசி மகன் விக்னேஷ் (23) என்பவர் கடத்திச் சென்று திருமணம் செய்ததும், பாதுகாப்பு கேட்டு பழனி போலீசில் தஞ்சமடைந்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பழனிக்கு சென்ற போத்தனூர் போலீசார் விக்னேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர். பின்னர் அந்த வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com