போத்தனூர் அருகே 2 வீடுகளில் திருட்டு

போத்தனூர் அருகே 2 வீடுகளில் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

கோவை:

கோவை சுந்தராபுரம் கஸ்தூரி நகரைச் சேர்ந்தவர் ராஜகுரு (வயது 30) மருந்து விற்பனை பிரதிநிதி. சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு மேட்டுப்பாளையம் சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ. 50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார்.

இதேப்போல் சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் சொந்த பணியின் காரணமாக பாலக்காடு சென்றார்.

பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த மேஜை டிராயரை திறந்து அதில் இருந்த ரூ. 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் போத்தனூர் போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com