போத்தனூர் அருகே சாக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்து - 2 வாலிபர்கள் பலி

போத்தனூர் அருகே சாக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போத்தனூர் அருகே சாக்கடைக்குள் மோட்டார் சைக்கிள் பாய்ந்து விபத்து - 2 வாலிபர்கள் பலி
Published on

கோவை:

கோவை போத்தனூர் அருகே உள்ள மெட்டூரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ஆறுமுகம் (வயது 21). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சிம்சன் (18).இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குனியமுத்தூர்- மாச்சாம் பாளையம் ரோட்டில் வேகமாக சென்றனர். மோட்டார் சைக்கிளை ஆறுமுகம் ஓட்டிச் சென்றார்.ஞானபுரம் அருகே சென்ற போது ரோட்டின் நடுவில் இருந்த வேகத்தடையை ஆறுமுகம் கவனிக்காமல் சென்றார். வேகத்தடையில் ஏறி இறங்கிய மோட்டார் சைக்கிள் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த சாக்கடை கால்வாய்க்குள் பாய்ந்தது.

இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த சிம்சனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை சிம்சன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com